Thursday, October 5, 2017

அவள்

உயிராய் என் நினைவு எங்கு 
இருந்தாலும் .. உணர்வாய் என்றும்  
உன் அருகில்

*****************************************.

என் கண் தேடும்  கண்மணியே ,
உன் முகம்  கண்டு என் அகம்  
மலர்ந்தேன்..

****************************************

மேகம் கலைந்த நிலவை போல்  
உன் முகம் என் கண்களில்...

****************************************

உன் பார்வையில் மலர்கிறேன்..
உன் அன்பில் வளர்கிறேன்..
உன் பேச்சில் உதிர்கிறேன்..
என்றும் மலராய் உன் மனதில்..

****************************************

மழை சாலையில் 
என் கை நடுவில் 
அவள் விரல்கள் !!!

****************************************

நதியென நீ .. இலையென நான்..
மிதக்கிறேன் என்றும் உன் நினைவாய்.

****************************************

கல்லென உன் கோவங்கள் என் மேல் விழ..
இருந்தும் மிதக்கிறேன் உன் அன்பால்..

இவன்,
ம.பால்ராஜ் 

தங்கை அன்பு !!!

முடிவில்லா வரைபடம் ஒன்று - என் 
கையில் கிடைத்தது அன்று,
அன்பென்னும் வண்டியில் தொடங்கிய பயணம்
இன்றும் நகர்கிறேன் நெடுங்குலும் அமுதம்...

பயணம் முழுவதும் வாழ்நாள் மகிழ்ச்சி,
அங்கும் இங்குமாய் குழியென பிரிவு,
வரைபடம் காண பலரின் தேடல்,
பகிர்ந்து கொள்ள என் மனம் இல்லை...

வரைபடம் என் தங்கையின் அன்பு,
அவள் தங்கை மட்டும் அல்ல -
என் உணர்வின் அங்கம்..

இவன் 
ம. பால்ராஜ் 

தங்கை

தோழியின் மூலம் கிடைத்தது 
தேவதையின் முகவரி,
சேர்ந்தேன் நினைந்தேன் 
அன்பெனும் மழையில் ,
மழையின் துளியில் என் 
இதயமும் நினைய,
கண்டேன் கொண்டேன் என் 
தங்கை அவளை..

சூரிய ஒளியில் பனித்துளி மறைய,
அவளின் அன்பில் என் மனம் நிறைய,
கேளாத வரமாய் வந்தவள் நீயே,
என்றும் நினைவுகள் உந்தன் அருகில்.


இவன்,
ம.பால்ராஜ்

அழகின் அழகு

அதிகாலை பொழுது, பனியால் வெட்க்கும் 
புல்வெளி சாலை - சற்று தொலைவில் ஏதோ ஒன்று,
மயில் போன்ற செய்கை - ஆனால்  அது
மயிலும் இல்லை,
மனம் மயங்கும் குரல் - அனால் அது 
குயிலும் இல்லை,
மீன்களின் நேர் எதிர் பார்வை - ஆனால்  அது 
குளமும் இல்லை,
நளினம் தெளிக்கும் நடை - ஆனால் அது 
மானும் இல்லை...

ஆவல் துடிக்க சற்றே நகர்ந்தேன்,
கண்டேன் பெண்மையை,
அழகின் அழகினை..

இவன்,
ம.பால்ராஜ் 

நட்பின் பிரிவு

அங்கொரு நாட்டில் பசுமை காட்டில் 
வளர்ந்த மரமொன்று இருந்தது,
ஆண்  கிளி ஒன்றும் பெண் கிளி ஒன்றும் 
நட்பாய் அங்கு சுற்றி திருந்தது...

நட்பின் அன்பினை பழங்களாய் ருசிக்க,
விழுந்த விதைகள் நினைவுகளாய் வளர்ந்தது,
காதலன் கண்டதும் பெண் கிளி பறக்க,
நினைவுகளுடன் வாழ்ந்தது ஆண் மட்டும் 


இவன்,
ம.பால்ராஜ் 

தோழி


மாதங்கள் கடந்தோடி வருடங்கள் ஆனது,
வருடங்கள் கடந்தோடி பத்தில் நின்றது,
என்றும் அழிய சுவடுகளை விட்டு சென்றது..

கடத்த வருடத்தை சற்றே நினைக்க,
எங்கும் கேட்கிறது இவளது குரலே..
மருந்தாய் அமுதாய் இவளது பேச்சு,
தோழியின் வடிவில் தேவதையின் வரவே.


இவன்,
ம.பால்ராஜ் 

Wednesday, October 4, 2017

வானவில்


வெண்பனி தட்டி என்னை எழுப்ப,
குயிலோசை இதமாய் என்னை இழுக்க,
சட்டென எழுந்தேன் அதிகாலை அது..

மங்கைபோல் மயிலும் ஆட,
என்னை மறந்து சென்றேன் அதன்பின்..

எந்த பொருளில்  மயிலை மங்கையுடன் 
உவமை செய்தேன்னோ பறந்தது மயிலும்..

சென்ற இடம் அறியவில்லை, வந்த வழி புரியவில்லை,
அச்சத்தில் நினைத்த என்னை மழையும் நினைக்க,
மழைக்கு ஒதுங்க பெரிய குடைக்குள் சென்றேன்,

என்ன ஆச்சர்யம் குடைக்குள் மழை, 
பின்புதான் தெரிந்தது அது வானவிலென்று.

இவன்,
ம.பால்ராஜ் 

தமிழ் - என் முதல்

  
தமிழ் மீது எந்நாளும்
என் அன்பு புடைசூழும்,
உன் புகழ் நான் பாட
என் மனம் உன்னை சேரும்..

தமிழ் படித்தேன் தமிழ் குடித்தேன்,
உன்னை நான் சுவைத்தேனே..
என் முன்ஜென்மம் நட்செயலின்
பலனாய் இதை பார்ப்பேனோ..

நீ விதைத்த விதையெல்லாம்,
மரமாகி பழம் தருமே.
பழம் சுவைத்த என் நாவு,
உன்னை பாட எந்நாளும் மறவாதே...



வாழ்க தமிழ் !!!

இவன்
ம. பால்ராஜ் 

அவள்

உயிராய் என் நினைவு எங்கு  இருந்தாலும் .. உணர்வாய் என்றும்   உன் அருகில் *****************************************. என் கண் தே...