உயிராய் என் நினைவு எங்கு
இருந்தாலும் .. உணர்வாய் என்றும்
உன் அருகில்
*****************************************.
என் கண் தேடும் கண்மணியே ,
உன் முகம் கண்டு என் அகம்
மலர்ந்தேன்..
****************************************
மேகம் கலைந்த நிலவை போல்
உன் முகம் என் கண்களில்...
****************************************
உன் பார்வையில் மலர்கிறேன்..
உன் அன்பில் வளர்கிறேன்..
உன் பேச்சில் உதிர்கிறேன்..
என்றும் மலராய் உன் மனதில்..
****************************************
மழை சாலையில்
என் கை நடுவில்
அவள் விரல்கள் !!!
****************************************
நதியென நீ .. இலையென நான்..
மிதக்கிறேன் என்றும் உன் நினைவாய்.
****************************************
கல்லென உன் கோவங்கள் என் மேல் விழ..
இருந்தும் மிதக்கிறேன் உன் அன்பால்..
இவன்,
ம.பால்ராஜ்
No comments:
Post a Comment